“இலவச மருத்துவக் கற்கையை பாதுகாப்போம். ; இலங்கையின் சுகாதார சேவையை பாதுகாப்போம்”
இவை ஏன்?
இலங்கையை மையமாகக் கொண்டு யோசிக்கும் போது, நடைமுறைக்கு பொருத்தமில்லாத ஒரு விடயம் தான் தனியார் கல்வி. ஆனால் அது இன்று பட்டி தொட்டி எங்கும் வியாபித்துள்ள வியாபாரமாக மாறி நிற்கின்றது.
மக்களும் கூட அந்த போதையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மை. என்ன வகை கல்வியையும் விலை செலுத்தினால் கற்கலாம். முறையான எந்த தகுதியும் தேவையில்லை.
மக்களும் கூட அந்த போதையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மை. என்ன வகை கல்வியையும் விலை செலுத்தினால் கற்கலாம். முறையான எந்த தகுதியும் தேவையில்லை.
மற்ற கல்விகளை விட மருத்துவக்கல்வி பிரதான இடம்பெறுவது அதன் புனிதத்தன்மையாலும் மக்களுக்கு அதன் தேவையாதலாலுமாகும்.
இலங்கையில் இலவசக்கல்வியானது இந்த சேவை தொடர வழியமைத்து தந்துள்ளது. இந்த அடிப்படையைக் கொண்டு தான் முதல் நியமனத்திற்கும் தொலைதூரக் கஷ்டப்பிரதேசங்களுக்கும் மறுபேச்சில்லாமல் செல்கிறார்கள் வைத்தியர்கள். காலாகாலமாக நடந்துவரும் இந்த வட்டத்தில் புதிய பிரச்சினை தான் SAITM எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி.
SAITM தொடர்பான பிரச்சினைகள்
1. உள்ளீர்ப்பு
1. உள்ளீர்ப்பு
உள்ளீர்ப்பின் தரம் கேள்விக்குறியதாகவே இன்னும் உள்ளது.
2009 இல் அவர்கள் செய்த விளம்பரம் “இலங்கையில் 3 or 4 வருடம்; ரஷ்யாவில் 1 or 2 வருடம்” என்பது தான். இது 2012 இல் 2 Option ஆக மாறியது.
1. முழுவதும் இலங்கையில்; NO ERPM exam.
or
2. 4 வருடம் இலங்கையில்; 1 வருடம் ரஷ்யாவில். With ERPM exam.
ஆனால் இப்போது முழுதும் இலங்கையிலாக மாறியிருக்கின்றது.
1. முழுவதும் இலங்கையில்; NO ERPM exam.
or
2. 4 வருடம் இலங்கையில்; 1 வருடம் ரஷ்யாவில். With ERPM exam.
ஆனால் இப்போது முழுதும் இலங்கையிலாக மாறியிருக்கின்றது.
*ஒரு வருடத்திற்கு இரண்டு உள்ளீர்ப்பு. (Local , London A/L).
*வைத்திய சபையின் ஆய்வின் போது உயர்தரம் சித்தியடையாத சிலரும் இனங்காணப்பட்டார்கள். இது தவிர வேறு துறைகளில் கற்ற ஒரு சிலரும் இருந்து பின்னர் அகற்றப்பட்டார்கள். ஆரம்பம் முதலே ஒழுங்காக உள்ளீர்ப்பை மேற்கொள்ளவில்லை. SLMC அறிக்கைக்கு பின்னர் தான் மாற்றங்களை ஆரம்பித்தார்கள்.
*2011 A/L இல் 3A எடுத்த 5 மாணவர்களுக்கு SAITM இல் இடம் வழங்கினார் அப்போதைய ஜனாதிபதி மகிந்த. அப்போது தான் SAITM பிரபல்யம் பெற்றது. இப்போதும் அந்த ஒரு சிலரையும் London A/L இல் 3A எடுத்த சிலரையும் வைத்து Business promotion செய்கிறார்கள்.
2. SAITM இலிருந்து வெளியேறும் மாணவர்களின் தரம்
இலங்கை வைத்திய கற்கையின் தரம் இறுதியாண்டுப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கடைசி இடம் கிடைப்பவனின் தரம் தான். ஏனெனில் அவருக்குத்தான் இலங்கையில் ஆகலும் வசதி குறைந்த மிகவும் கஷ்டப் பிரதேச வைத்தியசாலை கிடைக்கப் போகிறது. நோயாளியின் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அந்த வைத்தியனின் கையிலேயே இருக்கப் போகிறது.
SAITM இற்கு இந்த தரத்தை Certify செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. அவர்களது வைத்தியசாலையில் 1000 கட்டில்கள் இருந்தாலும் அங்கு தங்கி சிகிச்சை பெறுவோர் 10 பேர் என்று Dr. Neville Fernando கூறியிருந்தார்.
அரசு வைத்தியசாலையில் எத்தனை நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை எண்ணிச் சொல்வதும் கடினமே. எனவே, அங்கு கற்பவர்களுக்கு போதியளவு பயிற்சியும் கிடைக்கிறது.
கொழும்பிலுள்ள சகல Large Scale அரச வைத்தியசாலைகளும் போதனா வைத்தியசாலைகள். உண்மையில் இவற்றின் வசதிகளும் பூரணமில்லை. ஏறத்தாழ 1750 வைத்திய மாணவர்கள் பயிற்சி எடுக்கிறார்கள். இதற்கு நடுவே SAITM நிர்வாகமும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையை கோரியிருந்தமையும் மாணவர்கள் மற்றும் GMOA இன் பேராட்டத்திற்கு பின்னர் பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
3. அரசியலும் பணபலமும்.
SAITM இற்கு அரசியல் பக்க பலம் தாராளமாக உண்டு. தற்போதைய உயர்கல்வி அமைச்சர் “மூடவே மாட்டேன்; இது மகிந்த ஆரம்பித்தது” என்கிறார். முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ” ரஜரட்ட, கிழக்கு வைத்திய பீடங்களை விட SAITM சிறந்தது (இந்த குறைகளை நிவர்த்தித்து இருக்க வேண்டியவர்)” என்கிறார்.
இன்னும் பல அரசியல்வாதிகள், அரசியல் சார்ந்தோரும், பணக்காரர்களும், உயர் பதவிகளை வகிப்போரும் இருக்கிறார்கள்.
இன்னும் பல அரசியல்வாதிகள், அரசியல் சார்ந்தோரும், பணக்காரர்களும், உயர் பதவிகளை வகிப்போரும் இருக்கிறார்கள்.
இவற்றையும் தாண்டி SAITM Director பெருமையாக சொல்கிறார் ” அரச மருத்துவ பீட விரிவுரையாளர்கள் 20 பேரை எடுத்துவிட்டோம்” என்று. ( இது இலவசக்கல்விக்கு சாவுமணி என்பது விளங்கினால் போதும்).
இது தவிர எதிராக குரல் கொடுக்கும் அனைவரையும் அரசியல் பலம் கொண்டு அடக்குகிறது. வழக்கு தொடுக்கிறது.
SAITM இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. Clinical Training கேட்டார்கள், சும்மா அல்ல 50000 SLR per patient தருவதாக சொல்லி. இன்னும் கொஞ்ச நாளில் அவர்களுக்கு வேண்டிய இடத்தில் நியமனம் கேட்பார்கள் xxxxxxxxxxxx SLR தருவதாகச் சொல்லி. சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் கஷ்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது??
#இலங்கையில் 90% வீதமான மக்கள் இன்னும் அரச வைத்தியசாலைகளுக்கே செல்கின்றனர்.
இன்னும் குறைகளை சொல்லலாம்.
*SAITM என்ற பெயரின் விரிவாக்கம் முதலில் “South Asian Institute of Technology and Management” என்றிருந்து பின்னர் கடைசி வார்த்தை மட்டும் “Medicine” ஆக மாறியது. நேர்காணலொன்றில் “தனியார் கம்பனிகள் விரும்பியவாறு பெயர் மாற்றலாம்” என்று கூறியிருந்தார் அதன் ஆரம்பகர்த்தா.
*இந்த விடயத்தை இலங்கை முதலீட்டாளர்கள் அமைப்புக்கும் (BOI) அறிவித்திருக்கவில்லை.
*2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த இதற்கு போதனா வைத்தியசாலை கட்டப்பட்டது 2012 இல். அதுவும் தனியார் வைத்தியசாலையாக. (கொட்டாவ நகரிலிருந்து மாலபே சென்ற தனியார் பஸ் வண்டிகளின் பெயர்ப்பலகைகள் கூட ” கொட்டாவை To மாலபே Dr. NEVILLE FERNANDO வைத்தியசாலை” என்று மாற்றம் பெற்றது தனிக்கதை).
*SAITM என்ற பெயரின் விரிவாக்கம் முதலில் “South Asian Institute of Technology and Management” என்றிருந்து பின்னர் கடைசி வார்த்தை மட்டும் “Medicine” ஆக மாறியது. நேர்காணலொன்றில் “தனியார் கம்பனிகள் விரும்பியவாறு பெயர் மாற்றலாம்” என்று கூறியிருந்தார் அதன் ஆரம்பகர்த்தா.
*இந்த விடயத்தை இலங்கை முதலீட்டாளர்கள் அமைப்புக்கும் (BOI) அறிவித்திருக்கவில்லை.
*2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த இதற்கு போதனா வைத்தியசாலை கட்டப்பட்டது 2012 இல். அதுவும் தனியார் வைத்தியசாலையாக. (கொட்டாவ நகரிலிருந்து மாலபே சென்ற தனியார் பஸ் வண்டிகளின் பெயர்ப்பலகைகள் கூட ” கொட்டாவை To மாலபே Dr. NEVILLE FERNANDO வைத்தியசாலை” என்று மாற்றம் பெற்றது தனிக்கதை).
நான் மேலே கூறிய குறைபாடுகளைத் தீர்த்துவிட்டு வந்தாலும் வளர்ந்து வரும் நாடான இலங்கையில் தனியார் துறை ஊடுருவுவது ஆரோக்கியமானதல்ல. நாம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தரத்தில் இருப்பதற்கு காரணம் இலவச சேவை மாத்திரமே. அரசாங்கத்தின் முழுமையான கவனிப்பும் உதவியும் இருந்தால் மாத்திரமே இதை நீட்டிக்க முடியும். இப்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையில் சுகாதார சேவையை தனியார் மயப்படுத்துவதன் மூலம் இலாபமீட்ட உத்தேசித்திருக்கிறது.
பணபலம் படைத்தவர்களுக்கு நினைத்ததை செய்யக்கூடிய சூழ்நிலையை நாம் தான் மாற்ற வேண்டும்.
இதுவரை SAITM இனை சென்று பார்த்த SLMC , அனைத்து வைத்திய பீட தலைவர்களும் அதனை அரசாங்க மயப்படுத்தவும் அதனை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரவும் அறிவுறுத்தினாலும் யாருக்கும் அடங்காமல் தன்பாட்டில் பயணிக்கிறது அந்த நிறுவனம்.
இதில் அண்மையில் பரிசீலித்த பாராளுமன்ற உபகுழு SAITM போன்ற இன்னும் பலதை உருவாக்கி இலாபம் பெறும் துறையாக மாற்றலாம் என அறிவுரை கூறியிருப்பது நகைப்புக்கிடமாக உள்ளது. மேலும் அந்த நிறுவன செயற்பாடுகளை தரம் பார்க்க அதே நிறுவன உத்தியோகத்தர்களையே சிபாரிசு செய்து விட்டிருக்கிறது. இதை யாருக்காக எதற்காக செய்கிறார்கள்???
இதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு 2017 பட்ஜட்டை ஞாபகப்படுத்திப் பாருங்கள். கல்விக்கும் சுகாதாரத்திற்குமான ஒதுக்கீட்டில் எவ்வளவை இல்லாமலாக்கினார்கள்???
இலங்கையில் வைத்தியர்களை அதிகரிக்க வேண்டுமானால் அரசு மருத்துவ பீடங்களை நிறுவட்டும். தனியாருக்கு விற்கத்தேவையில்லை.
மருத்துவம் சேவையாக தொடர வேண்டும். மருத்துவக் கல்வியின் தரம் பேணப்பட வேண்டும். இதையாவது தனியாரிடமிருந்து மீட்டெடுப்போம். ஒன்றை நாம் அனுமதித்தாலும் இன்னும் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் இலங்கையில் ஊடுருவி விடும்.
போராடுவோம். இலங்கையிலுள்ள மக்களுக்காக.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள இப்போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் தருணம் தான் வெற்றித்தருணம்.
இது எனக்கான போராட்டமல்ல. எதிர்கால சந்ததிக்கான போராட்டம்.
No comments: